சென்னை, ஜுன் 19- பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றா வது சீசன் ஜூன் 23 ஆம் தேதி துவங் கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வர வேற்பைப் பெற்றிருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடி கருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கியிருந்தார். முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றிருந்தார். கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக ரசிகர்களையும் பெற்றி ருந்தனர். நடிகை ரித்விகா வெற்றி பெற்றிருந்த இரண்டாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி னார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளி பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்த நிலையில், இந்நிக ழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை ‘ஐபிஎஃப்’ எனப்படும் ‘இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின்’ தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்க றிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப் படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற் கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி ‘கலாச்சார’ சீர்கேட்டிற்கு காரணமாய் இருப்ப தாகக் கூறி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. கவர்ச்சிகரமான உடைகள் அணியப் படுவதாகவும், இரட்டை அர்த்த வச னங்கள் பேசப்படுவதாகவும் பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றி ருந்தது. அதே நேரம் பரவலான ரசிகர்களையும் பெற்றது. தற்போது நிகழ்ச்சிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை யில், இந்த வழக்கு விரைவில் விசார ணைக்கு வரும் எனத் தெரிகிறது.