tamilnadu

img

குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் பேருந்து சேவை

போக்குவரத்து கழக மேலாளரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை

கோவை, பிப்.15–  கோவை பிருந்தாவன் நகர், கஸ் தூரிபாளையம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் அரசு பேருந்து சேவையை தொடர்ந்து இயக்கிட கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அரசு போக்குவரத்து கழக பொது மேலா ளரை சந்தித்து வலியுறுத்தினார். கோவை விமான நிலையம் அரு கில் பிருந்தாவன் நகர், பூங்கா நகர் ஆகிய பகுதிகள் உள்ளது. இங்கு ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்ல அவினாசி பிரதான சாலையான சித்ராவில் இருந்தே பல்வேறு பகுதிக ளுக்கு சென்று வருகின்றனர். இங்கு  கடந்த காலங்களில் அரசு போக்குவ ரத்து கழகத்தின் நான்கு பேருந்துகள் ஓடிக்கொண்டிருந்தது. குறிப்பாக கணு வாய் முதல் பிருந்தாவன் நகர் வரையி லான 20 ஆம் எண் கொண்ட அரசு பேருந்து சேவையானது இப்பகுதி மக்க ளுக்கு பேருதவியாக இருந்தது. 

இந்நிலையில் தற்போது ஒரே ஒரு பேருந்து மட்டும், அதுவும் ஒருமுறை  மட்டுமே வந்து செல்கிறது. இதர பேருந்து சேவை துண்டிக்கப்பட்டுள் ளது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து அரசு  பேருந்து சேவையை நீட்டிக்க வலியு றுத்தி மனு அளித்தனர். இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் கஸ்தூரி பாளையத்தில் எஸ்21, 32எச் ஆகிய இரண்டு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தது. இச்சேவையும் திடீரென நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். ஆகவே கஸ்தூரிபாளையம் பகுதிக்கு பேருந்து  சேவையை தொடர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலி யுறுத்தினர். 

இதனையேற்று, சனியன்று மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட பொதுமேலாளர் மகேந்திரகுமாரை, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சந்தித்து மேற்கண்ட பகுதிகளுக்கு பேருந்து சேவையை தொடர வேண்டும் என வலியுறுத்தினார். இக்கோரிக்கைகளை கேட்டறிந்த கோட்ட பொதுமேலாளர் மகேந்திர குமார், நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை உடனடியாக பரிசீ லிப்பதாக உறுதியளித்தார். இச்சந்திப் பின்போது பிருந்தாவன் நகர், கஸ்தூரி பாளையம் பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் உடனிருந்தனர்.