சென்னை,பிப்.14- அரசு வேலைவாய்ப்பு, பொதுத் துறை நிறுவனங்களில் நடை பெறும் நியமனங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யப்படும். அதற்கேற்ப நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்க ளுக்கும் சிறப்பு ஆட்சேர்ப்பு பணி நடைபெறும். முதுகுதண்டுவடம் பாதிக்கப் பட்டோர் மற்றும் பார்க்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கும் மாதாந்திர பராமரிப்பு மானியம் வழங்கப்படும். புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு களுக்கும், உதவித்தொகை கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்க ளுக்கு ஒப்புதல் வழங்கவும் ஏதுவாக 2 லட்சத்து 10 ஆயிரம் தகுதியுள்ள பயனாளிகள் பயன்பெற 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வை திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர், பிறரை எளி தில் தொடர்பு கொள்வதற்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி கள் 10 ஆயிரம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற் காக 667 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
கீழடியில் அகழ்வைப்பகம்
ஹார்வர்டு பல்கலைக் கழகம், ஹூஸ்டன் பல்கலைக்கழகம், வார ணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம் உட்பட இந்தியா, வெளிநாடுகளில் உள்ளபுகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் தமிழ்மொழி கற்பித்தலை கெண்டுவர சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை கொண்டு ரூ.12 கோடி செலவில் அகழ்வைப்பகம் நிறுவப்படும். பட்டா ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 92 ஆயிரத்து 993 பேருக்கு பட்டா வழங்கப்படும்.
இணைப்பு கால்வாய்
அத்திக்கடவு-அவினாசி திட்டத் திற்கு 500 கோடி ரூபாயும், காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கவேரி-தெற்கு வெள்ளாறு இணைப்புக்கால்வாய் அமைக்க700 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியில் காப்பீடு
புரட்சிதலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள்காப்பீடு திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை
10 ஆயிரத்து 276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படு வார்கள். சிறைவாசிகள் பணியாற்ற புதிதாக 6 பெட்ரோல் நிலையங்கள் தொடங்கப்படும்.
எந்த கடையிலும் ரேசன்
ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்தி ருப்போர் மாநிலத்தின் எந்த ஒரு நியாய விலைக் கடையிலும் பொருட் களை வாங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
மீன்பிடி துறைமுகம்
மீன்பிடி தடைக்காலத்தில் உதவித் தொகை வழங்க 298 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ உருவாக்கியுள்ள டிரான்ஸ் பாண்டர் கருவிகள் 4 ஆயித்து 997 விசைப்படகுகளில் பொருத்தப் படும். விழுப்புரம் மாவட்டம் அழகன் குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரைக் குப்பத்தில் 235 கோடி ரூபாய் செலவிலும், நாகப்பட்டினம் ஆறுகாட்டுத்துறை யில 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்ப டும்.