மதுரை, மார்ச் 24- தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பரிசோதனை செவ்வாய்க் கிழமை மாலை மூன்று மணி நிலவரப்படி 2 லட்சத்து 09 ஆயி ரத்து 163 பேருக்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது. 15,298 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர், 9,154 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 116 பேர் புதிதாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். 743 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படு த்தப்பட்டுள்ளது. அதில் 608 பேருக்கு கொரோனோ அறிகுறியில்லை. பதி னைந்து பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் உடல்நலம் பெற்று வீடு திரும்பிவிட்டார். 120 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.