tamilnadu

img

பேங்க் ஆப் பரோடா உடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி இணைப்பு

பேங்க் ஆப் பரோடா உடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி நாளை (ஏப்ரல் 1) முதல் இணைக்கப்படுகிறது. இந்த இணைப்பு நடவடிக்கை மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை குறித்து அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டிலேயே 2-வது பெரிய பொதுத்துறை வங்கியாக பேங்க் ஆப் பரோடா செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 


இதை அடுத்து, ”வங்கிகள் இணைக்கு முடிவு தேவையற்றது. இதன் மூலம், நூற்றுக்கணக்கான கிளைகளை மூடப்படும், பொதுத்துறை வங்கி வேலை வாய்ப்பு குறையும், இந்த முடிவு பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும், பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல” என்று வங்கி ஊழியர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.


இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதியான நாளை முதல் விஜயா வங்கியும், தேனா வங்கியும், பேங்க் ஆப் பரோடாவின் கிளைகளாக செயல்படும். அந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இனி, பேப் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கை மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது.