tamilnadu

img

சிஏஏ-வை எதிர்த்தால் பாகிஸ்தான் செல்லவாம்... கல்லூரி மாணவிகளிடம் பாஜக-வினர் தகராறு

பெங்களூரு:
கர்நாடக மாநிலம், கொரமங்கலா ஜோதி நிவாஸ் கல்லூரியில் புகுந்த பாஜக தொண்டர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்குமாறு மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.உள்ளூர் பாஜக தலைவர் எம்.எம். கோவிந்தராஜின் ஆதரவாளர்களான பாஜக தொண்டர்கள், ஜோதி நிவாஸ் கல்லூரியின் சுவற்றில் ‘இந்தியா சப்போர்ட்ஸ் சிஏஏ’ என்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதனை மாணவிகள் எதிர்த்துள்ளனர். கல்லூரிச் சுவரில் இப்படி போஸ்டர் ஒட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பாஜக-வினர், சிஏஏ-வை ஆதரிக்க மாட்டீர்களா? சுவரொட்டி ஒட்டக் கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் என்ன, கல்லூரி உரிமையாளரா? சிஏஏ-வை ஆதரிக்காதவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது; நீங்களெல்லாம் பாகிஸ்தானுக்குச் சென்றுவிடுங்கள் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பதிலுக்கு மாணவர்களும், கல்லூரி வளாகத்திற்குள் அரசியலை நுழைக்காதீர்கள் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். கல்லூரிகளை போர் மண்டலமாக மாற்றாதீர்கள், சிஏஏவுக்கு எப்போதும் நோ-தான். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்க முயலாதீர்கள் என்று பதாகைகளையும் ஏந்தியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.