tamilnadu

img

ஏழை எளிய மக்களுக்கு  கல்லூரி மாணவர்கள்  மளிகை பொருட்கள் வழங்கிளர்

அறந்தாங்கி:
கொரோனா  காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களை கல்லூரி மாணவர்கள் வழங்கினர்.

 தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் சாமானிய மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக காரைக்குடி ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு  தேவையான மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வெள்ளியன்று அறந்தாங்கி, வன்னியப்பிள்ளைவயல் பகுதிகளில் வசித்து வரும்  குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வீடுவீடாக சென்று வழங்கினர்.நிகழ்ச்சியில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்தரசு, கல்லூரி துணை முதல்வர் பொன்வாசன், மாணவர்கள் விக்னேஷ்வரன், அப்துல்அஜீஸ், நிக்சன் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் பொருட்களை வழங்கினர்.