திருச்சூர், ஜுலை 29- கேரள சட்டமன்ற உறுப்பினர் சீதா கோபி காத்திருப்பு போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை அலுவலக முன்பகுதியை சாணி தெளித்து சுத்தம் செய்த இளைஞர் காங்கிரசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் திட்டத்திற்காக துண்டிக்கப் பட்ட சேர்ப்பு – திருப்பிறையார் சாலை யை சீரமைப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சனியன்று சட்டமன்ற உறுப்பினர் சீதா கோபி காத்திருப்பு போராட்டம் நடத்தி னார். போராட்டத்தை முடித்து சட்ட மன்ற உறுப்பினர் புறப்பட்ட பிறகு சேர்ப்பு பஞ்சாயத்து தலைவர் சி.கே.வினோத் தலைமையில் இளைஞர் காங்கிரசார் அந்த பகுதியை சாணி தெளித்து துடைப்பத்தால் கழுவினர். பஞ்சா யத்து உறுப்பினர்களான சுஜித், சந்தீப் உள்ளிட்ட பத்துபேர் இதை செய்துள்ள னர். காவல்துறையினர் இந்த காட்சி யை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இளைஞர் காங்கிரசார் வெளிப்படை யான சாதிய வெறுப்பை காட்டியுள்ள தாக சீதா கோபி எம்எல்ஏ கூறினார். பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் இதை செய்துள்ளனர். என்னுடன் மற்ற வர்கள் இருந்த இடத்தில் சாணி தெளிக்க வில்லை. சட்டமன்ற உறுப்பினரிடம்கூட இப்படித்தான் அணுகுவார்கள் என்றால் சாதாரண பெண்ணின் நிலை என்னவாக இருக்கும் என்றும் புகாரில் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் அளித்த புகாரின் பேரில் எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் 3(1)(யு) ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கும் சட்டத்துறை அமைச்சருக்கும் சபாநாயகருக்கும் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர் குருவாயூர் நகரசபை தலைவராகவும் இரண்டாவது முறையாக நாட்டிகை சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவருமாவார்.