புவனேஷ்வர், ஏப்.9- கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டு அமலில் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து ருகிறது. இதனால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள், நிபுணர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஒடிசாவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசா வில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கொரோனா பாதிப்பு பிற மாநி லங்களை விட குறைவாகவே உள்ள போதிலும், நாட்டி லேயே முதல் மாநிலமாக ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி நிலையங்கள் வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை மூடப் பட்டிருக்கும் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் அறி வித்தார். ஒடிசாவில் இதுவரை 42 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒருவர் உயிரிழந் துள்ளார்.