tamilnadu

img

தேசத் துரோகிகளை ‘மேலே’ அனுப்பும் பணி துவங்கியது... பாஜக எம்எல்ஏ கொக்கரிப்பு

பெங்களூரு:
தேசத் துரோகிகளை நேரடியாக ‘மேலே அனுப்பும்’ பணி துவங்கி விட்டதாக, தில்லிசம்பவத்தைக் குறிப்பிட்டு, கர்நாடக பாஜக எம்எல்ஏ பசன கவுடா பேசியுள்ளார்.இதன்மூலம் தில்லி வன்முறையானது, பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரங்களின் திட்டமிட்ட ஏற்பாடே என்பதையும் பகிரங்கமாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.விஜயபுராவில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பசனகவுடா, “தேசத்துரோகிகளை சிறைக்குஅனுப்பி பிரியாணி வழங்கும் காலம்முடிந்துவிட்டது. அவர்களை நேரடியாக‘மேலே அனுப்பும்’ பணி ஞாயிற்றுக்கிழமை முதலே தொடங்கிவிட்டது. சம்பவ இடத்திலேயே முடிவு எடுத்துவிட வேண்டும். நாட்டில் இத்தகைய புரட்சி நடைபெற வேண்டும்.இல்லாவிட்டால் இந்துக்களை பாதுகாக்க முடியாது” என்று பேசியுள்ளார்.