கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் டொயோட்டா ஓபன் என்ற பெயரில் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடை பெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்தி ரங்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலை யில், ஆடவர் இரட்டையர் பிரிவில் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி மட்டும் இந்தியா விற்காக கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றி நடையுடன் வலம் வருகிறது. இந்நிலையில் சனியன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி, தென் கொரியா வின் கோ ஸுங் - ஷின் பயக் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி 22-20, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி யுள்ளது. இறுதிப்போட்டியில் சீனாவின் லி ஜூன் - யு ஜென் ஜோடியை ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி விடுமுறை தினமான ஞாயிறன்று எதிர்கொள்கிறது.
சினம் கொண்ட சுனாமியாக மாறிய இந்திய ஜோடி
ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சுவாரஸ்யமான விஷயம் நிகழ்ந்துள்ளது. என்னவென்றால் முதல் இரண்டு செட்களில் இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இந்திய அணி எளிதாக இறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது செட்டின் நடுப்பகுதியில் தென் கொரிய ஜோடி திடீரென தாக்குதல் பாணி ஆட் டத்தைக் கையிலெடுக்க அந்த செட்டை இந்திய ஜோடி பறிகொடுத்தது. எங்கள் வெற்றியை பறித்து விட்ட தென் கொரியாவை சும்மா விடமாட்டோம் என்ற எண்ணத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய ஜோடி மூன்றாவது செட்டில் ருத்ரதாண்ட வம் ஆடி 21-9 என்ற செட்கணக்கில் தென்கொரிய ஜோடியை புரட்டி எடுத்தது.