tamilnadu

img

பி.வி.சிந்துவிற்கு கேரள அரசு சார்பில் பாராட்டு விழா

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரான பசலில் உலக பேட் மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று புதிய வர லாறு படைத்த பி.வி.சிந்துவிற்குக் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு புதனன்று பாராட்டு விழா நடத்திக் கவுரவித்துள்ளது.  கேரள ஒலிம்பிக் சங்கம் மற்றும் கேரள விளையாட்டுத் துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பாராட்டு விழாவில்  கேரள முதல்வர் பினராயி விஜயன், விளை யாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் (காங் கிரஸ்) ஆகியோரின் முன்னிலையில் திருவனந்த புரத்தில் உள்ள ஜிம்மி ஜார்ஜ் உள்விளை யாட்டு அரங்கத்தில் பாராட்டு விழா  நடை பெற்றது.  

விழாவில் பி.வி.சிந்துவிற்கு முதல்வர் பின ராயி விஜயன் கேரள அரசின் சிறப்பு விரு தினை வழங்கி கவுரவித்தார். சிந்து பதக்கம் வென்ற தருணத்தில் கேரள அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் பரிசுத் தொகை யை, கேரள ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுனில் குமார் வழங்கினார்.  தங்க மங்கை சிந்துவிற்கு இந்தியாவில் பல்வேறு இடங்களில் பாராட்டு விழா நடத்தப்பட்டாலும் (ஆந்திரா, தெலுங்கானா  தவிர) கேரள அரசு ஒருபடி மேலே சென்று அரசு விழாவாகக் கொண்டாடி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.