உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மேன் தங்கம் வென்றார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியானது கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. இப்போட்டி உலக வேகப்புயல் உசைன் போல்ட் ஓய்வு பெற்ற பிறகு நடப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மேன், 9.76 வினாடிகளில் 100 மீட்டர் இலக்கை கடந்து தங்கம் வென்றார். மேலும் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்தார்.