tamilnadu

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்..  கெர்பர் அதிர்ச்சி தோல்வி 

மெல்போர்ன் 

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்றுடன் 4-வது சுற்று ஆட்டம் நிறைவு பெற்றது. 

செவ்வாயன்று காலிறுதி ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், ரஷ்யாவின் அனஸ்டாசியாவை எதிர்கொண்டார். இருவருமே சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில், அனஸ்டாசியா 6-7 (5-7), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் கெர்பரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 

இதே போல ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால் உள்ளூர் நாயகன் (ஆஸ்திரேலியா) கிர்ஜியஸை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 3-6, 7-6(8-6), 7-6(7-4) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.