அரியலூர், ஆக.6- திருச்சியிலிருந்து -சிதம்பரம் வரையிலான 140 கிமீ தூர தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில், அரிய லூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம், கழு வந்தோண்டி உள்ளிட்ட பல கிரா மங்கள் வழியாக சாலை அமைக் கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சூசையப்பர் பட்டினம் கிராம பிரதான சாலை யை முழுவதுமாக அடைத்து மேம்பாலம் அமைத்து சாலை பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சாலையை மறிக்காமல் பணி நடைபெற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்காமல் பணி நடைபெற்ற தால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து துணை வட்டாட்சியரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.