tamilnadu

img

சாலையை மறித்து சாக்கடை பள்ளம்  அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர், ஜன. 4- திருப்பூர் அருகே 18-வது வார்டில் சாலையை மறித்து சாக்கடை பள்ளம் தோண்டி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 18 ஆவது வார்டு பகுதியில் 5000 க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சேடர்பாளையம் பேருந்து நிறுத்தம் அரு கில் தனிநபர் நலனுக்காக சாலையை மறித்து சாக்கடை  வசதிக்காக பள்ளம் தோண்டி கழிவு நீரை தொடர்ச்சி யாக வெளியேற்றி வருகிறார். இதனால் அவ்வழியாக மிதிவண்டி மூலம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இரவு நேரங்களில் செல்வோர் விபத்துள்ளாக வாய்ப்புள்ளது. எனவே, உட னடியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் சாக் கடை பள்ளத்தை அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.