tamilnadu

img

பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

 அரியலூர், அக்.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி அன்னை தெரசா கல்வி  நிறுவனங்களின் சார்பில் தாளாளர் முத்துகுமரன் தலைமை யில் நடைபெற்றது. பேரணியை நகராட்சி ஆணையர் சந்திர சேகர் துவக்கி வைத்தார். நகராட்சி சுகாதார உதவி ஆய்வா ளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். பேரணி அண்ணா சிலை  முன்பு துவங்கி முக்கிய வீதிகள் வழியாக காந்தி பூங்கா  வந்தடைந்தது. அங்கு, ‘ஒருநாள் பயன்படுத்தும் பிளாஸ்டி க்கை பயன்படுத்த மாட்டோம்’ என அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர். அன்னை தெரசா ஆசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.