tamilnadu

img

அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப்.13- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை என்ற உத்த ரவை வாபஸ் பெற வேண்டும். அனை வருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண் டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அவர் கள் வீடு கட்ட அரசு மூலம் உதவி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் டி.தியாகராஜன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம். மகேந்திரன், கே.மல்லிகா, எம்.ராமச்சந்தி ரன் எம்.ராஜா, எஸ்.குமார், பாலசுப்பிரமணி யம், துரைராஜ், அமுதா, ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்டச் செயலாளர் கே.மகா ராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் கே.பி. பெருமாள், மாவட்ட பொருளாளர் ஆர்.இளவரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்டம் ஒன்றி யச் செயலாளர் எம்.வெங்கடாஜலம், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் பி.பரமசிவம், தா.பழூர் ஒன்றியச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்தி ரன் மாதர் சங்க மாவட்டத் தலைவர் வி. பத்மாவதி, ஒன்றியச் செயலாளர் அம்பிகா, ஒன்றிய துணை செயலாளர் ஏ.பல்கீஸ் ஆகி யோர் கண்டன உரை நிகழ்த்தினர்.