tamilnadu

img

புற்றுநோய் பாதித்த மாணவருக்கு ரூ. 20 லட்சம்

விசாகப்பட்டினம்:
தனது காரை மறித்து, கல்லூரி மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அந்த இடத்திலேயே ரூ. 20 லட்சம் நிதியுதவிக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு ஜெகன்மோகன் ரெட்டி வந்தபோது, விமான நிலையத்தின் வெளியில் சில கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளுடன் நின்றுகொண்டு, முதல்வரின் பார்வையில் படும்படி கவனத்தை ஈர்த்துள்ளனர். அதனைக் கண்ட ஜெகன்மோகன் ரெட்டி, உடனடியாக காரை விட்டு இறங்கி மாணவர்களிடம் சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, தங்கள் நண்பனான நீரஜ்என்பவர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நீரஜ், சிகிச்சைக்குப் பணமின்றி உயிருக்குப் போராடுவதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக முதல்வரான ஜெகனின் கவனத்தை ஈர்க்கவே, பதாகைகளுடன் அணிவகுத்து நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்ட ஜெகன்மோகன் ரெட்டி, உடனடியாக  விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை சம்பவ இடத்துக்கு வர வழைத்து, நீரஜ்ஜூக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, ஆந்திர அரசு சார்பில்  உடனடி யாக மாணவர் நீரஜின் சிகிச்சைக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த நடவடிக்கையால், கல்லூரி மாணவர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். பல்வேறு தரப்பினரும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைப் பாராட்டியுள்ளனர்.