ஆந்திராவில், தலைமை செயலக ஊழியர்கள் 3 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,679 ஆக உயர்ந்துள்ளது. 62 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 76 பேருக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில், ஆந்திராவில், தலைமை செயலக ஊழியர்கள் 3 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தலைமைச் செயலகத்தின் 3,4வது கட்டடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிளாக்குகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.