வாஷிங்டன், ஜூலை 8- உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை அமெரிக்கா துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவைப் பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வி யடைந்துவிட்டது எனக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், அந்த அமைப்புடனான அமெரிக்காவின் உறவைத் துண்டிப்ப தாகக் கடந்த மே மாதம் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யு மாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் கேட்டுக் கொண்டபோதும்அதற்கு டிரம்ப் செவிசாய்க்க வில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவை ஐ.நாவுக்கும், அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் தற்போது டிரம்ப் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கான நடைமுறைகள் முடிய குறைந்தது ஒரு வருடம் ஆகும். ``உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதற்கான அறிவிக்கையை அமெரிக்கா அனுப்பியுள்ளது. 2021 ஜூலை 6-க்கு பிறகு அமெரிக்கா விலகும்`` என ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
அமெரிக்காவை தனிமைப்படுத்தும்
“கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்க அதிகாரப்பூர்வமாக விலகுவது குறித்த அறிவிக்கையை வெள்ளை மாளிகை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது`` என வெளியுறவுக் குழுவின் உறுப்பினரும், ஜனநாயக கட்சியின் முன்னணி செனட்டருமான ராபர்ட் மெனண்டெஸ் டிவிட்டரில் பதிவிட்டுள் ளார். இந்த முடிவு,``அமெரிக்கர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்; அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும்`` எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன்,``நான் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற முதல் நாள், மீண்டும் உலக சுகாதார நிறுவனத்து டன் அமெரிக்கா இணையும்`` எனத் தெரிவித்துள்ளார்.