tamilnadu

img

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான தம்பதி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் உலகின் மிக வயதான தம்பதி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் 106 வயதான ஜான் ஹெண்டர்சன் மற்றும் இவரது மனைவி 105 வயதான சார்லெட். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாக கல்வி பயின்றபோது காதல்வசப்பட்டு, 1939 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். வரும் டிசம்பர் 15 ஆம் தேதி, இந்த தம்பதி தங்களது 80-வது திருமண நாளை கொண்டாட உள்ளனர்.இந்நிலையில், உலகின் மிக வயதான தம்பதி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த தம்பதி டெக்சாஸ் மாகாணத்தில் அதிக வயதான தம்பதிகள் என்ற வகையில் அம்மாகாண ஆளுநர் இவர்களை சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.