அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ, அதிவேகமாகப் பரவி வருவதால் சுமார் 4 ஆயிரம் பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு கலிபோர்னியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 89 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று சாஸ்டா கவுன்டியில் உள்ள பெல்லா விஸ்டா என்ற நகருக்கு அருகே உள்ள வனத்தில் தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், 2 மணி நேரத்தில் 600 ஏக்கர் வனப்பரப்பை காட்டுத் தீ நாசமாக்கியது. வெப்பமும் கொளுத்திய நிலையில், காட்டுத் தீயின் கணிக்கப்பட்ட பாதையில் உள்ள ஆயிரத்து 100 வீடுகளை விட்டு 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், பிற இடங்களில் உள்ளவர்கள் வெளியேறத் தயாராக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.