சென்னை, செப்.30- இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது பட்ட மளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
வரவேற்புக்கு பிறகு விமான நிலை யத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத் துக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங் களை வழங்கினார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில் நுட்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகை யையொட்டி சென்னை ஐ.ஐ.டி. வளா கத்தை சுற்றி 2,500 அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதிரடிப்படை வீரர் களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.