ஜேஎன்யு முன்னாள் பேராசிரியர் அருண்குமார் கருத்து
புதுதில்லி, நவ.23- இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு, 2016-இல் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்கமே காரணம் என்று பிரபல பொருளாதார வல்லுநரான அருண்குமார் கூறியுள்ளார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழகத்தின் முன்னாள் பேராசிரிய ரான அருண் குமார், கறுப்புப் பணம் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருபவர் ஆவார். இந்நிலையில், பணமதிப்பு நீக்க நட வடிக்கை அமல்படுத்தப்பட்டு, மூன் றாண்டுகள் முடிந்துள்ள நிலையில், பண மதிப்பு நீக்கம் பொருளாதாரத்தில் ஏற் படுத்தி விளைவுகள் குறித்து கருத்துக் களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கறுப்புப் பணம் மூலம் வருவாய் என்ற சிந்தனையே, 2016-இல் கொண்டுவரப் பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு காரணமாக தெரிகிறது. ஆனால், கறுப்புப் பணம், பணமாகவே இருப்ப தில்லை. கறுப்புப் பணம் வைத்திருப்ப வர்கள், அதனை வேறொன்றாக மாற்று கிறார்கள். அதன்மூலம் வருவாய் ஈட்டு கிறார்கள்.
எனவே, பணமதிப்பு நீக்க நடவ டிக்கையால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதுதான் மிச்சம். ஏனெனில் பண மதிப்பு நீக்கம், அமைப்புசாரா துறை களை கடுமையாக பாதித்துள்ளது. அமைப்புசாரா துறைகள்தான், இன்றும் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக் கிய அம்சமாக இருக்கிறது. ஆனால், மேல்நோக்கி இருக்க வேண்டிய அதனு டைய வளர்ச்சி தற்போது எதிர்த்திசை யில் சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமோ, 5 சதவிகிதமோ அல்லது 5.8 சதவிகிதமோ அல்ல, அது மைனஸ் 1 சதவிகிதமாக இருக்கிறது. அமைப்பு சார்ந்த துறைகளும் இறங்கு முகத்திலேயே உள்ளன. அமைப்புசார்ந்த துறைகளின் வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கிறது; ஆகவே வளர்ச்சி அதிகரிக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அமைப்பு சாரா துறைகளால், அமைப்பு சார்ந்த துறை களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனு டைய வெளிப்பாடுதான் பொருளாதாரச் சரிவு ஆகும். இந்த இரண்டுதுறைகயையும் சேர்த்தே பார்த்தாலும், நாட்டின் பொரு ளாதாரமானது, கடந்த 3 ஆண்டுகளாக மந்த நிலையில்தான் உள்ளது; இதற்கு பணமதிப்பு நீக்கமே காரணம். இவ்வாறு பேராசிரியர் அருண் குமார் கூறியுள்ளார்.