tamilnadu

img

வடக்கு அயர்லாந்து கலவரத்தில் பத்திரிகையாளர் சுட்டு கொலை - 2 பேர் கைது

வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிகையாளர் லைரா மெக்கீ, சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கலவர நினைவு தினமானது நேற்று முன்தினம் வடக்கு அயர்லாந்து பகுதியில் உள்ள சிரிகனில் அனுசரிக்கப்பட்டது. அப்போது டெரி நகரத்தில் உள்ள கிரெக்கன் பகுதியில் திட்டமிட்ட கலவரம் அரங்கேறியது. 

இது தொடர்பாக அட்லாண்டிக் இதழில் பணியாற்றி வரும் செய்தியாளர் மெக்கீ, கலவரம் குறித்த படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். கலவரத்தின் போது, மெக்கீ போலீசார் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த கார்கள் மற்றும் வேன்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் 50 பெட்ரோல் குண்டுகள் போலீஸ் வாகனத்தின் மீது வீசப்பட்டது. அதில் வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. 

இதையடுத்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பத்திரிகையாளர் மெக்கீயை சுட்டதில், அவர் படுகாயம் அடைந்தார். இதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மெக்கீ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கலவரத்தை தீவிரவாத நிகழ்வு என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் வீடியோக்கள் மூலம் சுட்டவரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். இந்நிலையில் தற்போது 18 வயது மற்றும் 19 வயது உடைய இருவரை தீவிரவாத சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.