அகமதாபாத்:
காஷ்மீரில் 150 நாட்களைக் கடந்தும் இணைய சேவைகள் சரியாக வழங்கப்படாத நிலையில், அதனை நியாயப்படுத்தியும், காஷ்மீர் மக்களை கொச்சைப் படுத்தியும் ‘நிதி ஆயோக்’உறுப்பினர் வி.கே. சரஸ்வத் பேசியுள்ளார்.குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் வி.கே. சரஸ்வத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியுள்ளார்.அப்போது காஷ்மீரில் இணையச் சேவை முடக்கப்பட் டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள சரஸ்வத், “காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்படுவதற்கான காரணம் முற்றிலும் வேறுபட்டது. சட்டப்பிரிவு 370ரத்து விஷயத்தில், காஷ்மீரின்சாலைகளில் மீண்டும் போராட்டங்களை உருவாக்க முயற்சிநடக்கிறது. மக்களைத் தூண்டுவதற்கு சமூக ஊடகங்களைஅவர்கள் பயன்படுத்துகிறார் கள். அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “காஷ்மீரில் இணையம் இல்லையென்றால், அதுபொருளாதாரத்தில் ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை” என்று கூறியுள்ள சரஸ்வத், “இணையம் இருந்தால் அதில் எதைப் பார்க்கப் போகிறார்கள்? தவறான படங்களைப் பார்ப்பதைத் தவிர..?” என்றும் இழிவாக பேசியுள்ளார்.