tamilnadu

img

ஆர்பிஐ கட்டுப்பாடு விதிப்பதற்கு முன் ரூ.265 கோடியை எடுத்த குஜராத் நிறுவனம்

அகமதாபாத்:
அதிகளவிலான வராக்கடன், மோசமான நிர்வாகம் ஆகியவற்றால் பெரும் நிதி நெருக்கடியில் மாட்டிய‘யெஸ்’ (YES) வங்கியின் நிர்வாகத்தை, இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்பிஐ) வியாழக்கிழமையன்று தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.அடுத்த 30 நாட்களுக்கு, எஸ்பிஐயின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் ‘யெஸ்’ வங்கி நிர்வாகம் செயல்படும் என்று கூறியதுடன், ‘யெஸ்’ வங்கியின் வாடிக்கையாளர்கள், அவர்களின்கணக்கிலிருந்து ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாது என்றுகட்டுப்பாடு ஒன்றையும் விதித் துள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சாதாரண மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட பணம் எடுக்க முடியாத சிக்கலில் மாட்டியுள்ளனர்.

இந்நிலையில்தான், மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 50 ஆயிரம் என்ற கட்டுப்பாட்டை விதிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, குஜராத்தைச் சேர்ந்த ‘ஸ்பெஷல் பர்பஸ் வெகிகிள்’ நிறுவனம் ஒரே நாளில் ரூ.265 கோடியை ‘யெஸ்’ வங்கிக் கணக்கிலிருந்து எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.குஜராத் மாநிலம் வதோதரா நகரில்ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணிகளைவ தோதரா மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் ‘ஸ்பெஷல் பர்பஸ் வெகிகிள்’ என்ற குஜராத் அரசு நிறுவனம் ஒப்பந்ததாரராக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு மத்தியஅரசு ரூ. 265 கோடியை அனுப்பியிருந்தது. ‘யெஸ்’ வங்கியில் முதலீடுசெய்திருந்த, அந்த பணத்தைத்தான் ‘ஸ்பெஷல் பர்பஸ் வெகிகிள்’ நிறுவனமானது, ஆர்பிஐ-யின் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக எடுத்துள் ளது. இது பலத்த சந்தேகங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.