அண்டார்டிகாவில் கடந்த 50 ஆண்டுகளில், பென்குயின்களின் எண்ணிக்கை 75 சதவீதத்திற்கும் மேலாக குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் 70 சதவீதம் நன்னீர், அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ளது. புவி வெப்பமயமாதலால் அங்குள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், அண்டார்க்டிகா வரலாற்றிலேயே, கடந்த 7-ஆம் தேதி 65 டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிக வெப்பநிலை பதிவானது. இதுவே எதிர்வரும் காலங்களில் வெப்பநிலையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அண்டார்க்டிக் தீபகற்பத்தின் வடகிழக்குப் பகுதியும், முக்கியமான பெங்குயின் வாழ்விடமுமான எலெஃபண்ட் தீவில், கடந்த 50 ஆண்டுகளில் 75 சதவீதத்திற்கும் மேலாக பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக காலநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.