டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தரமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி, தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகணங்களையும், நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகளையும் வழங்க வேண்டும், ஊழியர்கள் அனைவருக்கும் 50 லட்ச ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் வேலூர் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் வி.பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், தலைவர் எம்பி.ராமச்சந்திரன், நிர்வாகிகள் என் வேல்முருகன், கே.கர்ணன், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.