tamilnadu

கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் சிபிஎம் பிரச்சாரம்

விழுப்புரம், ஏப். 9-

மதச் சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் விழுப்புரம்(தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக் குமார், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பொன். கவுதம சிகாமணி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஜெய்கணேஷ், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.சங்கராபுரத்தில் தேர் தல் பிரச்சாரக் கூட்டம் ச.சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் வை.பழனி வரவேற்றார். கள்ளக்குறிச்சியில் வட்டச் செயலாளர் பி. மணி தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.