tamilnadu

img

கிரிக்கெட் வேகப்பந்துவீச்சு... - சதீஸ் முருகேசன்

நாட்டின் மிகப்பெரிய விளை யாட்டுத் தொடரான கிரிக்கெட் விளையாட்டின் செயல்பாடு சிறு குழந்தை களுக்குக் கூட நன்குதெரியும். இளசுகளின்  பிரதான பொழுதுபோக்கு மட்டுமின்றி  மனம் கவர்ந்தகாதல் நாயகனும் கிரிக்கெட் தான்.  இத்தகைய சிறப்புமிக்க கிரிக்கெட் விளையாட்டை ஒருகாலத்தில் பணக்கார விளையாட்டு எனக் கூறினார்கள். ஆனால் தற்போது ஆங்காங்கே முளைக்கும் டி-20 லீக் தொடர்களால்சாமானியர்களுக்கும் சர்தேச கிரிக்கெட் விளையாட்டில் காலடி வைக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. 

கிரிக்கெட்டின் நுரையீரல்

இந்த கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய அம்சம் வேகப் பந்துவீச்சு தான்.அதாவது 2 வேகப்பந்துவீச்சு வீரர்களை உள்ளடக்கிய அணி மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும். வெற்றி பெற முடியும். புரி யும்படி சொன்னால் கிரிக்கெட் விளை யாட்டின் நுரையீரல் வேகப்பந்துவீச்சுதான்.

வேகப்பந்துவீச்சின் சிறப்பு 

கிரிக்கெட் விளையாட்டில் சுழற்பந்து வீச்சை விட வேகப்பந்துவீச்சு தான் அதிக ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது. அதாவது ஆட்டத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் வேகப்பந்துவீச்சு தான் முக்கிய பங்காற்றும். சொல்லப்போனால் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வதும் வேகப் பந்துவீச்சு தான்.பவுன்சர், ஸ்விங் என இரண்டு முக்கிய வகைகளைக் கொண்ட இந்த வேகப்பந்துவீச்சை  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற  நாடுகள் அதிக ஆர்வத்துடன் விரும்பி விளை யாடும். கிரிக்கெட் உலகின் செல்வாக்கைப் பெற்றுள்ள மிகப்பெரிய இந்திய அணியோ சுழற்பந்து வீச்சைத் தான் அதிகம் விரும்பும். எனினும் தற்போது நிலை மாறி வருகிறது.    இந்த சிறப்பு வாய்ந்த வேகப்பந்து வீச்சை இளசுகள் மிகக் கடினமானதாக நினை ந்து சுழற்பந்து வீச்சைத் தேர்வு செய்கின்ற னர். வேகப்பந்துவீச்சு கடினம் தான். இல்லை யென்று சொல்லவில்லை. ஆனால் அதன் நடைமுறையை ஆவலுடன் புரிந்து முயற்சி செய்தால் எளிதாகத் தான் இருக்கும். அத னைப் பற்றி விவரமாகப் பார்ப்போம் 

உடலின் தன்மை 

வேகப்பந்துவீச்சு என்பது சராசரியாக 135 கிமீ வேகத்தில் வீசக்கூடியது என்பதால் அதற்கேற்ற நல்ல உடல்வாகு தேவை. கை யின் தசைகள், காலின் தசைகள் வலுவாக இருக்க வேண்டும். முக்கியமாக முரட்டு மன நிலையுடன், எதையும் சமாளிக்கக் கூடிய திறன் இருக்க வேண்டும். கூர்மை புத்தி தீட்டப்பட்டிருக்க வேண்டும். ஆக்ரோஷம், அதிரடி, பதிலடி கொடுக்கும் அளவிற்கு ஏற்ற குணத்தைப் பெற்றிருக்க வேண்டும். குறிப் பாக எளிதில் சோம்பலடையாத உடல்நிலை யும் முக்கியம். 

பயிற்சி எப்படி? 

பொதுவாக வேகப்பந்துவீச்சுக்குப் பயிற்சியாளரின் நுணுக்கம் 25% மட்டுமே தேவை. மற்ற 75% பயிற்சிகள் சொந்தமாகவோ அல்லது மூத்த வீரர்களின் ஆலோசனை மூல மாகவோ கற்றுக்கொள்ளலாம்.

மைதான நுணுக்கம் 

முதலில் கிரிக்கெட் பிட்சின் அளவை பற்றி பார்ப்போம். கிரிக்கெட் பிட்சின் மொத்த அளவு 22 யார்டு (2012 செமீ) ஆகும். பார்க்க நீளமாக இருப்பது போன்று இருக்கும். பந்து வீசி பழக பழக சரியாகிவிடும். அடுத்து பந்து வீச்சு செய்யும் மையப்புள்ளியான கிரீஸ் பகுதி. கிரீஸ் பகுதிகளில் 2 பகுதி (போப்பிங், பௌலிங்) உள்ளது. வேகப்பந்துவீச்சில் முக்கியமானது போப்பிங் கிரீஸ் தான். இதில் காலை சரியாக வைத்தால் தான் சரியான பந்துவீச்சு என நடுவர் கூறுவார். காலை போப்பிங் கிரீஸிற்கு உள்ளே வைத் தால் பிரச்சனையில்லை. வெளியே வைத்தால் நோ பால் எனக்கொடுத்து இலவச பந்துவீச்சு எதிரணிக்கு (ஃபிரி கிட்) ஒன்றை யும் நடுவார் அளிப்பார் என்பதால் பந்து வீச்சாளர்களுக்கு போப்பிங் கிரீஸ் தான் முக்கிய வில்லன்.இந்த கிரீஸ் பகுதியில் காலை வைத்து பந்து வீசுவதற்கு அதிக பயிற்சி அவசியம். 

பந்துவீசுவது எப்படி?

முதலில் பந்தின் தையல் உள்ள பகுதி யில் ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் பதித்து கட்டை விரலைக் கீழ்ப்பகுதியில் தாங்கி பிடிக்க வேண்டும். 12 ஸ்டெப் பாத இடைவெளியில் (ஓட்டத்திற்கு) ஓடிவந்து இரண்டு கிரீஸ் பகுதிகளில் சரியாகக் காலினை வைத்து (இடதுகை, வலதுகை முன்னங்கால்,பின்னங்கால் வேறுபாடும்) பந்து வைத்திருக்கும் கையினை சுற்றி தலை யைக் குனிந்தபடி பந்தினை ரிலீஸ் செய்ய வும். அப்பொழுதுதான் பந்து சரியாகப் பிரதி பலிக்கும். குறிப்பாகக் கையிலிருந்து பந் தினை உருவச்செய்ய வேண்டுமே தவிர, எறி தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது.   அது விதிமுறை செயலாகும். மணிக் கட்டைக் கவனமாகச் சுழற்ற வேண்டும். மீறி னால் பந்துவீசத் தடை விதிக்கப்படும். இது தான் வேகப்பந்துவீச்சின் வழிமுறை ஆகும். ஆர்வத்துடன் பங்குபெற்றால் சாதிக்கலாம்.  

குறிப்பு : முதன்முதலாக வேகப்பந்து வீச்சிற்கு முயற்சி செய்யும் இளசுகள் 2 நாட்கள் இடைவெளியுடன் விட்டு விட்டுபயிற்சி யைத் தொடங்க வேண்டும். ஏனென்றால் கால், கை, முதுகு பகுதிகளில் தசை இறுக்க மடையும். இதனால் தொடக்க நாளில் உட லின் தசைகள் காய நிலையில் இருப்பது போன்று இருக்கும். நடக்க, படுக்கச் சிரம மாக இருக்கும். அதனால் 2 நாள் இடைவெளி யில் பயிற்சியைத் தொடங்கலாம்.