சென்னை,டிச.30- அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்க ளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள் ளது. சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி மேற்கு நோக்கி நகரத் தொடங்கி விட்டதால், அதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சென்னை டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 4 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.