சென்னை, ஜுன் 2-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:இசைஞானி இளையராஜா அவர்களின்76 வது பிறந்த நாளில் அவரை வாழ்த்து வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.குக்கிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்த அவர், இன்று உலகுபோற்றும் பெரும் கலைஞராக உயர்ந்திருக்கிறார். இசையின் உச்சங்களையெல்லாம் தொட்டு சாதனை படைத்திருக்கிறார். பொதுவுடைமை இயக்கத்தின் மகத்தான கலைஞர் தோழர் பாவலர் வரதராஜனின் இளவலான இளையராஜா, இளம்வயதில் பொதுவுடைமை இயக்க மேடைகளில் தமிழகம் முழுவதும் தமது சகோதரருடன் இணைந்து இசைத்துப் பெருமை சேர்த்தவர்.மாபெரும் கலைஞர் இளையராஜாவை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல்லாண்டு வாழ வாழ்த்துவதோடு, இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தப் போற்றுகிறோம். அவரது பிறந்த நாளில் மீண்டும் எங்கள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.