கொல்கத்தா, ஜன.11- இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை கொல்கத்தா சென்ற பிரதமர் மோடியை, ராஜ் பவனில் முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மரி யாதை நிமித்தமாக நடை பெற்ற இந்த சந்திப்பின் போது, நாங்கள் குடி யுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை எதிர்க்கிறோம். அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். இது பற்றி பேச தில்லிக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்ததாகவும் மம்தா தெரிவித்தார். பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலை யத்தில் வந்திறங்கியதும், விமான நிலைய வாயிலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. விமான நிலையத்தில் வந்தி றங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் ஜக்தீப் தன்கர் மற்றும் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.