உ.பி. மாநிலத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு
முசாபர்நகர்:
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள திகை கிராமத் தில் அம்பேத்கர் சிலைஒன்று சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள்செவ்வாயன்று போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தபோலீசார், உடைந்த சிலை யையும் சீரமைத்தனர்.
துர்கா சிலை கரைப்பு: 10 பேர் பலி!
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையன்று நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழா நிறைவில், இரவுநேரத்தில் துர்க்கை சிலையைக் கரைப்பதற்கு, அங்குள்ள பார்வதி ஆற்றுக் குச் சென்றுள்ளனர். அப்போது சிறுவன் ஒருவன் ஆற்றில் மூழ்கவே,அவனைக் காப்பாற்றுவதற்கு மற்றவர்களும் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால், அவர்களும் நீரில் மூழ்கி, 10 பேர் வரை பலியாகினர்.
வேலையில்லா இளைஞர்க்கு ரூ. 5 ஆயிரம்
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்குவந்தால், இளைஞர்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணமாக மாதந் தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரமாக உயர்த்தப்படும்; 500 சதுர அடி பரப்பளவு வரை உள்ள வீடுகளுக்கு சொத்துவரியில் விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுளது.