செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

img

பாஜக நிகழ்ச்சியை புறக்கணித்த சுமித்ரா மகாஜன்

போபால், ஏப்.2- மக்களவை சபாநாயகரான சுமித்ரா மகாஜன், பாஜகவின் மூத்ததலைவர்களில் ஒருவர் ஆவார். 8 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால் இந்த முறை அவருக்குபாஜகவில் சீட் வழங்கப்படவில்லை. இதனால், சுமித்ரா மகாஜன் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்தூரில் பிரதமர் மோடியின் ‘நான் ஒரு காவலன்’என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாஜக, சுமித்ரா மகாஜனை விழாவுக்கு அழைத்திருந்தது. பொதுவாகஇந்தூரில் எந்த விழா நடந்தாலும் சுமித்ரா மகாஜன் தவறாமல் அதில் கலந்து கொள்வார். ஆனால் ஊரில் இருந்தும்கூட, ‘நான் ஒரு காவலன்’ நிகழ்ச்சியில் சுமித்ரா மகாஜன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். அவரதுஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரஹரிதா, ஆகாஷ் விஜய் உள்ளிட் டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

;