tamilnadu

50 ஆயிரம் காலிப்பணியிடம் மின்வாரியத்தில் வேலை கோரி வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்....

மதுரை:
தமிழ்நாடு மின்சார வரியத்தில் உள்ள 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங் மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை  புதூர் மின்வாரிய அலுவலகம் முன்பு வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக் குழுக்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர்மாவட்டத் தலைவர்கள் பி.கோபிநாத், தமிழரசன் ஆகியோர்  தலைமை வகித்தனர். மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாநகர் மாவட்டச் செயலாளர் டி. செல்வராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ். கார்த்தி, புறநகர் மாவட்டப்பொருளாளர் பாலகிருஷ்ணன்,  மின் ஊழியர் மத்திய அமைப்பின்  தலைவர் மாயத்தேவன், செயலாளர் அறிவழகன், ஜிசிசி கிளைச் செயலாளர் சிக்கந்தர், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சரண், நவீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விருதுநகர்
விருதுநகரில் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவகம் முன்பு நடைபெற்ற  போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஜெயந்தி தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத் பேசினார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் சௌந்திரபாண்டி, கட்டுமான சங்கமாவட்ட செயலாளர் பி.ராமர், தீ.ஒ.முன் னணியின் மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார் ,   சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா ஆகியோர்  பேசினர். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;