tamilnadu

தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகள் ஒமைக்ரான் அதிகம் பரவுவதை தடுக்கும்

ஜெனீவா, டிச.12- தற்போது செலுத்தப்படும் கொரோன தடுப்பூசிகள் ஒமைக்ரான் அதிகம் பரவு வதை தடுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் புதிய உருமாற்ற மான ஒமைக்ரான்  பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நியில் தற்போது செலுத்தப் பட்டு வரும் தடுப்பூசி இந்த புதிய வைரசுக்கு எதிராக செயல்படுமா என்று கேள்வி எழுந் துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால் கூறுகையில், கொரோனா தற்போது பல பிறழ்வுகளாக உருவெடுத்து வருகிறது. உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தடுப்பூசியின் மூலம் விடுபட்டு வருகிறது. தற்போது செலுத் தப்பட்டு வரும் தடுப்பூசிகள், ஒமைக்ரான் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பை தடுக் கும். அதே நேரத்தில் புதிய தொற்றுக்கள் பரவுவதை முழுமையாக தடுக்காது என்பதை அறிவது முக்கியம்.  நோய்த்தொற்றினால் கடுமையான பாதிப்பினை எதிர்கொள்ளும் நபர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நபர்களுக்கு தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தேவைப்படுகிறது. மேலும் வைர சுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து மதிப் பீடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

;