மேட்டூர் கிராமத்தில் குடும்பத்தினர் 5 பேரை கொலை செய்து விட்டு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அருகே, ஒரந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில், பழனிச்சாமி (40) என்பவர் தனது மனைவி வள்ளி (37), குழந்தைகள் திரிஷா( 15), மோனிஷா( 14), தனுசியா (4), சிவசக்தி (7 ), பூமிகா ( 9 ) ஆகிய 6 பேரை வெட்டி விட்டு செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பூமிகா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.