அரசுக்கு ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 9- மகளிர் உரிமைத்தொகை பெறு பவர் பட்டியலில் வறுமைக்கோட்டு க்குள் உள்ள அனைவரையும் இணைத்து, அவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு: திமுகவின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் குடும்பத் தலைவி களுக்கு உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறி விப்பு தமிழக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. பொதுவாக பெண்களின் வீடுசார் பணியை யாரும் உழைப்பாகவே அங்கீகரிப்பதில்லை. ஆனால் தமிழக அரசு அறிவித்த இந்த உரிமைத் தொகை, பெண்களின் வீடு சார் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக் கிறது என்ற ரீதியில் ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றது. தற்போது அவ்வுரிமைத் தொகை யை பெறுவதற்கான வரையறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த வரையறையில் ஒன்றுக்கு மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால் ஒரு வர் மட்டுமே இத்தொகையை பெற விண்ணப்பிக்க முடியும் என கூறி யிருக்கின்றது. ஆனால் கூட்டுக் குடும்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பெண்கள் இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே இந்த உரிமைத் தொகை கிடைக்கும் என்பது ஏற்புடை யதல்ல. இது இத்திட்டத்தின் நோக்கத்தையே தகர்த்துவிடும். மேலும் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு உட்பட்டதாக குடும்ப வருமானம் இருக்க வேண்டும் என்ற வரையறையை உயர்த்த வேண்டும். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட மக்கள் பிரதி நிதிகளுக்கு இந்த உரிமைத்தொகை இல்லை என கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் பல மட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எவ்வித ஊதியமும் அளிக்கப் படுவதில்லை. எனவே அவர் களுக்கும் இந்த உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும். மேலும் ஏற்கெனவே முதியோர், விதவை ஓய்வூதியம் பெறுவோர், அமைப்புசாரா தொழில் நல வாரிய ஓய்வூதியம் பெறுவோர் போன்ற சமூக நலத்திட்டங்களை அரசிடம் இருந்து பெறுபவர்களுக்கு இத்தொகை கிடைக்காது என அரசின் வரையறை கூறுகிறது. உதவித் தொகை நோக்கம் வேறு, உரிமை தொகை நோக்கம் வேறு. மிகக் கடுமையான விலை உயர்வை சந்திக்கின்ற ஏழை, எளியவர்களான இப்பெண்களும் இந்த உரிமைத் தொகையை வாங்குவோர் பட்டிய லில் இணைக்கப்பட வேண்டும். மேற்கூறிய அடிப்படையில் தமிழக அரசு வரையறையை விரிவாக்கி அதிகமான பெண்களுக்கு உரிமைத்தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.