சங்கனாச்சேரியில் உள்ள என்எஸ்எஸ் கல்லூரியில் சந்தீப்பும் அவரது மனைவி சுனிதாவும் பட்டப்படிப்பு படித்தனர். எஸ்எப்ஐ தலைவர் சந்தீப்புடன் ஏற்பட்ட பழக்கத்திற்கு பிறகு திருமணம் நடைபெற்றது. தன்மீது காதல்கொண்டு மணந்த சந்தீப்புக்கு பிறந்தநாள் (டிச.4) பரிசாக கொடுப்பதற்கு அந்த செம்பழுப்பு நிற சட்டையை சுனிதா வாங்கி வைத்திருந்தார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வரும் முதலாவது பிறந்தநாள் இது. அந்த நாள் நெருங்குவதற்கு ஒருநாள் முன்னதாக சுனிதாவின் கனவுப் பூவை கொலையாளிகள் கவர்ந்து சென்றனர். நாட்டு மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பூக்களால் போர்த்திக் கொண்ட சந்தீப்குமாரின் உயிரற்ற உடம்பின் மீது அந்த சட்டையை வைத்தார் சுனிதா. சுற்றி நின்றவர்களால் குமுறலையும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘எல்லோருக்கும் சேட்டனை பிடித்திருந்தது. சேட்டனுக்கு எதிரிகள் இல்லை, ஏன் அப்படி செய்தார்கள்?’’ சுனிதாவின் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
திருவல்லா, டிச.4- பெய்து ஓயாத கண்ணீர் மழை யில் மக்கள் வெள்ளம் அலை யடித்தது. துயரம் கனத்த மனங்க ளின் மத்தியில், செந்தொண்டர் களும் சாதாரண மனிதர்களும் பல் லாயிரக்கணக்கில் திரண்டு வந்து சந்தீப்புக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
ஆர்எஸ்எஸ் சதிக் கும்பலால் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட சிபிஎம் பெரிங்கர லோக்கல் கமிட்டி செயலாளரும், முன்னாள் பஞ்சா யத்து உறுப்பினருமான பி.பி.சந்தீப்குமாருக்கு அஞ்சலி செலுத்த தலைவர்களும் பொதுமக்களும் அணி அணியாய் வந்தனர். வியாழனன்று (டிச.2) இரவு 8 மணியளவில் ஆர்எஸ்எஸ் அமைப் பினரால் கொல்லப்பட்ட சந்தீப்பின் உடல் திருவல்லா மிஷன் மருத்துவ மனையிலிருந்து பொதுமக்கள் பார்வைக்காக திருவல்லா பகுதிக் குழு அலுவலகத்துக்கு வெள்ளி யன்று காலை கொண்டு செல்லப் பட்டது.
மாவட்டச் செயலாளர் கே.பி.உதயபானு தலைமையில் சந்தீப் பின் உடலுக்கு கட்சிக் கொடி போர்த்தப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்தனர். பிற்பகல் 2 மணி யளவில் பெரிங்கரா பஞ்சாயத்து அலுவலக வளாகத்துக்கும், பின்னர் பெரிங்கரா உள்ளூர் கமிட்டி அலு வலகத்துக்கும் உடல் கொண்டு செல்லப்பட்டது. சந்தீப் படித்த சாத்தங்கேரி எஸ்என்டிபி பள்ளியி லும் பொதுமக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணியளவில் சந்தீப் வீட்டிற்கு உடல் கொண்டு வரப் பட்டது.
அவரது மனைவி சுனிதா, தாய் ஓமனா மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி னர். 6 மணியளவில் வீட்டின் முற்றத் தில் சந்தீப்குமாரின் உடலுக்கு மூன் றரை வயது மகன் நிஹால் கொள்ளி வைத்தான். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன், தேசாபிமானி பொது மேலாளர் கே.ஜே.தாமஸ், அமைச்சர்கள் எம்.வி.கோவிந்தன், கே.என்.பால கோபால், சாஜி செரியன், வி.என். வாசவன், வீணா ஜார்ஜ், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.உன்னி கிருஷ்ண பிள்ளை, டிஒய்எப்ஐ அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ. ரஹீம் மாதர் சங்க மாநிலச் செயலா ளர் சி.எஸ்.சுஜாதா உள்ளிட்ட தலை வர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி னர்.