tamilnadu

img

நாகையில் பௌத்த அடையாளத்தை தாங்கி நிற்கும் புத்தர் சிலைகள் பாதுகாக்கப்படுமா?

நாகப்பட்டினம், மே 15- நாடெங்கிலும் புத்த பூர்ணிமா  விழா கொண்டாடும் இவ்வேளையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரா மரிப்பற்ற நிலையில் இருக்கும் புத்த  சிலைகள் பாதுகாக்கப்படுமா என  அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். நெய்தல் நிலத்தின் இடப்பெயர் களான பட்டினம் மற்றும் பாக்கம் என்  பது, கடற்கரையோர பெரு துறை முக நகரங்களை “பட்டினம்” என வும், சிறு துறைமுக நகரங்களை “பாக்கம்” எனவும் குறிப்பிட்டதில், வங்கக் கடலின் பெரு துறைமுக நகர மான, நாகர்கள் வாழ்ந்த பகுதியான இம்மாவட்டம் நாகப்பட்டினம் என பெயர் பெற்றது. மாவட்டம் முழுவதிலும் பௌத்த மத குறியீடுகள் இன்று வரை ஏரா ளமாக உள்ளன. பல ஊர்களின் பெயர்கள் பௌத்தத்தை தாங்கி நிற்கிறது. பௌத்தம் செழித்து வளர்ந்ததற்கான ஆதாரங்கள் நிறையவே காணப்படுகின்றன.

பௌத்த மத துறவிகளான “பிக்கு கள்” ஓய்வெடுத்து தங்களுடைய மத  காரியங்களை ஆற்றுவதற்கான தலைமை பீடமாக விளங்கும் விகா ரைகள், நாகப்பட்டினத்தில் இருந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. அப்படி தலைமை பீடமாக விளங்கி யது “சூடாமணி பௌத்த விகார்”.  இந்த விகாரில் பின்னாளில் ராஜ ராஜ சோழன் இலங்கைத் தீவிற்கு படையெடுத்துச் செல்லும்போது, வேதாரணியம் கால்வாய் வழியாக தங்களுடைய படைகளை திரட்டி சென்றதும், செல்லும்போது வழியில் ஓய்வெடுத்து தங்குவதற்காக சூடா மணி பௌத்த விகாரை பயன்படுத்தி யுள்ளார் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. கடந்த காலங்களில் மாவட்டம் முழுவதும் நடந்த ஆய்வுகளில் செப்  பேடுகளும், கல்வெட்டுகளும், பல வரலாற்றுத் தரவுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் பெரும் பான்மையானவை பௌத்த மத குறி யீடுகளையே தாங்கி நிற்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், பல கிரா மங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் புத்தர் சிலைகளை உள்  ளூர் தெய்வங்களாக மக்கள் வணங்கி வருகின்றனர். பல்வேறு ஊராட்சிகளில் இன்னமும் பௌத்த மதத்தின் பெயர்களையே குழந்தை களுக்கு சூட்டி வருகின்றனர். 

புஷ்பவனத்தில் புத்தர் சிலை 

நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்ப வனம் கிராமத்தில் ஒரு ஆலமரத்தின் கீழ் சுமார் 5 அடி உயரம் கொண்ட  ஒரு புத்தர் சிலை ஆல விழுதுகளூடே இருக்கிறது. இச்சிலையை அவ்வூர் மக்கள் நாட்டார் தெய்வம் என வணங்கி வருகின்றனர். எவ்வித கோவில் பின்புலமும் இல்லாமல் சிலை மட்டுமே சுயம்புவாக இருக்கி றது. தியான நிலையில் இருக்கும் இச்சிலை எவ்வித கட்டுமானங்களும் இல்லாத சூழலில் ஒரு ஆலமரத் தின் கீழ் காணப்படுவது சிறப்பம்ச மாகும். சிலை வடதிசை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. 

சிதைக்கப்பட்ட நிலையில் புத்தர் சிலை

மற்றொரு சிலை வேளாங் கண்ணிக்கு மேற்கே தலையாமழை ஊராட்சி கீராந்தி கிராமத்தில் அடர்ந்த கருவேலங்காட்டில் ஐந்தடி உயரம் கொண்ட புத்தர் சிலை ஒன்று காணப்படுகிறது. இங்கும் எவ்வித கட்டுமானங்களும் இல்லை. இச்சிலையின் முகத்தை சிதைத்து உள்ளனர். தலைப்பாகையின் மேல்  இருக்கும் தீச்சுடரை வெட்டி கழுத்தை துண்டித்துள்ளனர். இச்சிலையின் கீழ் சில குறிப்புகளும் உள்ளன. கிழக்கு நோக்கி இச்சிலை இருந்தா லும் சென்று வருவதற்கு சற்று சிரம மாக இருக்கிறது. அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் அந்த முகப்பகுதி யை கழுத்து பகுதியோடு ஒட்ட வைத்து வணங்கி வருகின்றனர்.

அகரகடம்பனூர் ஊராட்சி '

புத்தமங்கலம் என்ற கிராமத்தில் புத்தருக்கு என்று தனிக்கோவில் வைத்து வணங்கப்படுகிறது. இங்கு  சிலைக்கு பீடம் அமைத்து சிறிய அள வில் மேற்கூரை போடப்பட்டு கோவி லாக வணங்கப்படுகிறது. இச்சிலை யின் முகப் பகுதியில் சிறிதளவு சிதி லம் அடைந்திருந்தாலும் அவ்வப் போது வழிபாடுகள் நடந்த வண்ணம் உள்ளன. பல இந்து மத கோவில்  கள் பௌத்த கட்டிடக் கலைக்கு  தொடர்புடையதாகவே இருக்கின் றன.  சிதிலமடைந்த நிலையில் பௌத்த கட்டிடக் கலையின் அடை யாளங்களுடன் பாழடைந்து, மக்கள் செல்லாத வண்ணம் நிறைய கட்டு மானங்கள் அழிவுறும் தருவாயில் உள்ளன. இந்த சிலைகள் இருக்கும் பகுதி களில் வசிக்கும் மக்கள் இந்த சிலை களை வேறு எங்கும் எடுத்துச் செல்லா மல், சிலைகள் இருந்த பகுதியி லேயே வைத்து வணங்குவதற்கும், அவை பாதுகாப்பாக இருப்பதற்கும் அதற்குரிய கட்டிடக் கலைகளுடன் கூடிய கட்டுமானங்கள் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத் துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் சென்று  பார்ப்பதற்கும், ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்கள் சென்று வருவதற் கும் இச்சிலை இருக்கும் பகுதி களில் சரியான போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும் என்ற  கோரிக்கையிம் முன்வைக்கப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் தொல்லி யல் ஆய்வு மீண்டும் நடைபெற்றால் இன்னும் ஏராளமான பௌத்தம் சார்ந்த சான்றுகள் கிடைக்கப் பெற லாம். அகரகடம்பனூர் ஊராட்சி புத்தர்மங்கலம் கிராமத்தில் புத்தர்  சிலை இருப்பதனாலேயே இக்கிரா மத்தின் பெயர் புத்தர்மங்கலம் என  வழங்கலாயிற்று என்பது குறிப்பி டத்தக்கது.

- ஆதி.உதயகுமார்


 

;