சென்னை,டிச.7- கட்டணமில்லா வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசின் அறிவிப்புக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத் ்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கட்டணமில்லா வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குக் கடந்த 2021 அக்டோபர் மாதம் வரை காலம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டி ருந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு இக்கால நிர்ணயத்தை 2022 மார்ச் 31 வரை நீட்டித்துத் தர வேண்டி 12-10-2021 அன்று தமிழக முதல் ்வர் மற்றும் வணிகவரித்துறை அமைச்ச ருக்குக் கோரிக்கை மனு அளித்தி ருந்தது. 2022 மார்ச் 31 வரை கட்டண மில்லா வணிகர் நல வாரிய உறுப்பி னர் சேர்க்கைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்தக் கால நீட்டிப்பு அடித்தட்டு வணி கர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசின் இவ்வறி வுப்புக்குத் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரி வித்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.