tamilnadu

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் பங்கேற்போம்!

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் பங்கேற்போம்!

மதுரை, ஜூன் 30- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) நிர்வாகிகள் கூட்டம் மதுரை சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் சம்மேளன உதவித் தலைவர்  பொன்கிருஷ்ணன் தலை மையில் நடைபெற்றது.  தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறவும்,  கடுமையான விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்தத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் ஜூலை 9 அன்று நடைபெற உள்ள அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தொழிலா ளர்கள் மாநிலம் முழுவதும் கலந்துகொள்வது  என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கிய கோரிக்கைகள் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளின் படி 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்பவர் களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரப் பணியிடங்களில் உள்ள  காலிப் பணியிடங்களை நிரந்தரத் தொழிலா ளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.  அரசின் குறைந்தபட்சக் கூலி சட்டம் 1948 இன்படி வெளியிடப்பட்ட அரசாணை எண் 62இன் அடிப்படையில், அவுட்சோர்சிங் தூய்மைப் பணியாளர், குடிநீர்ப் பிரிவு பணி யாளர்கள், ஓட்டுநர், எலக்ட்ரீசியன், பிளம்பர்,  வரி வசூலர், டெங்கு நோய் தடுப்புப் பிரிவுத்  தொழிலாளர்கள், கிராம ஊராட்சித் தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவ லர்கள், ஓஎச்டி டேங்க் ஆபரேட்டர்கள் அனை வருக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தனியார்மயம் எதிர்ப்பு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிரந்தரப் பணிகளை தனியார்மயம் என்ற  பெயரில் 152, 139, 10 என்ற அரசாணைகளைப் பிறப்பித்து அவுட்சோர்சிங்காக மாற்றி யுள்ளது. மக்களின் வரிப்பணம் தனியார் முத லாளியின் கொள்ளை லாபத்திற்கு உதவக்  கூடாது. இந்த தனியார்மய அரசாணை களைத் திரும்பப் பெற வேண்டும். அவுட்சோர்சிங் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ், வார விடுப்பு, தேசியப் பண்டிகை விடுப்பு, யுஏஎன்,  உபகரணங்கள், சீருடை, 8 மணி நேர  வேலை என்ற உரிமைகளை வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் முன்களப் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த மூன்று மாத ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்க வேண்டும். 40 ஆண்டுகள் பணிபுரியும் ஓஎச்டி ஆப ரேட்டர்களுக்கும் தூய்மை காவலர்களுக் கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்புக்  காலமுறை ஊதியம் பெறும் தூய்மைப் பணி யாளர்களுக்கு 7ஆவது ஊதியக் குழு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க  வேண்டும்.  ஊராட்சித் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் பொங்கல் கருணைத் தொகையாக வழங்க வேண்டும்.  உயர்  நீதிமன்ற உத்தரவின்படி ஓஎச்டி தொட்டியை  சுத்தம் செய்வதற்கு ரூ.300 கிளீனிங் அல வன்ஸ் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படா மல் உள்ளது. தொடர் போராட்ட முடிவு மேற்படிக் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களும் கலந்துகொண்டு தொடர் போராட்டம் நடத்து வது என்று முடிவானது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செய லாளர் கே.ரங்கராஜன், சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் உள் ளிட்ட சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.