tamilnadu

img

மக்கள் ஒற்றுமை முன்னெடுப்போம்

மக்களை திரட்டி போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது விருது நகர் மாவட்ட மாநாடு வரும் 12.13.தேதிகளில் சிவகாசியில் எழுச்சியுடன் நடைபெறுகிறுது. 

மார்க்சிஸ்ட் கட்சியின் பலமே தொழில் வாரியாக இன மாக சாதியாக மதமாக பிரிந்து கிடக்கும் மக்களை வர்க்கங்க ளாக திரட்டுவதுதான். இவர்களுக்கு எதிரான அரசுகளின் கொள்கை முடிவுகளை எதிர்த்து மக்களை திரட்டி போராடு வதும் கொள்கை மாற்றங்களுக்கான போராட்டங்களை முன்னெடுப்பதும்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயக புரட்சியின் திட்டம்.   தேசம்முழுவதும் மக்கள் ஒற்றமையை சீரழித்திட பல பெயர்களில் பல வேடங்களில் வலதுசாரிகள் களம் இறங்குகின்றனர். அவர்களின் செயல்பாடுகளுக்கு ஆதர வாக ஊடகங்கள் வளைதளங்களை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் மத ரீதியாக சாதி ரீதியாக இன மொழி ரீதியாக வெறுப்புணர்வுகளை ஊட்டி வளர்கின்றனர்.  பல மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், பலவாக இருந்தாலும் மதித்து புரிதலோடு ஒன்றுபட்டு மக்கள் வாழ்வது உலகின் மற்ற நாடுகள் வியக்கும்பெருமை மிகு விஷயம்.  விருது மாவட்ட மக்கள் தொகை 2011 கணக்கெ டுப்பின்படி இந்துக்கள், மூஸ்லிம்கள், கிறித்தவர்கள் என மக்கள் வாழ்கின்றார்கள்.

இந்த மாவட்டத்தின் பெரும் பகுதி மக்கள் பிரதானமாக ஈடுபடும் தொழிலாக பட்டாசு, தீப்பெட்டி, விசைதறி, மற்றும் விவசாயம் இருந்து வரு கின்றது. இந்த தொழில்களில் அனைத்து பிரிவு மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மத மக்களும் தங்களது மதம் சார்ந்த பண்டிகையை தனியாகவும் இணைந்தும் கொண்டாடி வருகின்றார்கள்.  ஒவ்வொரு மதத்திற்கும் விழாக்கள் தனித் தனியானது. தங்கள் வழிபடும் ஒரே பெயர் உள்ள கடவுளுக்கு கூட ஒவ்வொரு ஊருக்கும் விழாக்கள் தனித்தனியானது. ஒரே ஊரில் கூட தெரு வாரியாக விழா நடக்கும். இந்த வேற்று மைகள் நிறைந்திருந்தாலும் விழாக்கள் ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் கலாச்சாரம் நிறைந்தது.

தங்களுக்குள் மதம் வேற்றுமையின்றி ஒற்றுமையாக தாங்களது பண்டி கையை கொண்டாடி விருந்துகளில் கலந்து கொள்வது உணவுகளை பகிர்ந்து கொள்வது என்ற பண்பாட்டோடு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பெருமை மிகுந்த மாவட்டம்.  தற்போது இந்த ஒற்றுமையை சீர்குலைத்திட இந்ந விழாக்களையே தனதாக்கி செயல்படவும் அதன் மூலம் பிரிவினைகளுக்கு தூபமிட தலைமை பொறுப்புகளை பயன் படுத்தவும்வலதுசாரி சக்திகள் குறிப்பாக சங்பரி வார அமைப்புகள் கடும் முயற்சி செய்கின்றனர்.  லட்சக்கணக்கான மக்களை தங்கள் கொள்கைகளின் பின்னால் திரடிடவும் அதில் ஒரு பகுதியினரை மற்ற வர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுத்தவும் முயற்சிக் கின்றனர் குழந்தைகளை குறி வைத்து சிலம்பம் உடல் பயிற்சிகள் கற்று தருகின்றனர்.  சிறுபான்மை மதங்களை பின்பற்றுவோர் மீது தாக்கு தல் தொடுக்க துவங்கியுள்ளனர். மசூதிகள் உள்ள தெருக்க ளில் தடையை மீறி விநாயகர் சிலைகளை கொண்டு, செல்வது வன்முறை தூண்டும் கோஷங்களை முழங்கு வது, கிருஸ்தவ வழிபாட்டு கூடங்களில் இடையூறு செய்வது பெருகிவருகிறது. இதன் மூலம் ஒரு சமூக பதற்றத்தை ஏற்படுத்தி பெரும்பான்மை மக்களை தங்கள் பிடியில் வைத்து கொள்வது தலைமை பொறுப்புகளை இச்செயல் களுக்கு பயன்படுத்துவது துவங்கியுள்ளது. இந்ந நட வடிக்கைகளுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் மட்டும் எதிர் வினையாற்றுவதை சங்பரிவார அமைப்புகள் தங்க ளுக்கு பின்னால் பெரும்பான்மை மக்களை அணி திரட்டிட முயற்சிக்கிறது.  இந்த புரிதலோடு தான் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஒற்று மையை வலுபடுத்திட அனைத்து மதங்களிலும் மக்கள் ஒற்றுமையை விரும்புகின்ற அனைவரையும் ஒருங்கி ணைத்து செயல்படுகிறது. கருத்தரங்கம், இயக்கங்கள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. கருத்து ரீதியான பிரச்சாரங்களை கொண்டு செல்கின்றது.

அரசு களின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அனைவரை யும் திரட்டி போராடுவதன் மூலம் வர்க்க ஒற்றுமையை உரு வாக்குகிறது.  சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமை, கல்வி, வேலை வாய்ப்பில் உரிய பங்கினை வழங்க வலியுத்து கிறது. சொந்த நிலங்களில் கட்டியுள்ள ஆலயங்கள், மசூதி கள், அடக்க ஸ்தலங்கள் ஆகியவற்றிக்கு தாமதமின்றி அனுமதி வழங்கிட வலியுறுத்துகிறது. மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள்,ஈடுபடுவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை கோருகிறது. சிறுபான்மை மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்வதுதான் உண்மை யான ஜனநாயகமாகும்.  வளமான நாட்டின் மக்கள் ஒற்றுமையுள்ளவர்களாகவும் நாகரிகம் பண்பாடு நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என்றார் தத்துவஞானி வால்டேர்.  நமது விருதுநகர் மாவட்டத்தை வளமான மாவட்ட மாக மாற்றிட மக்கள் ஒற்றுமை பதாகையை உயர்த்தி பிடிப்போம். மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயக புரட்சி திட்டத்தை நோக்கி முன்னேறுவோம் என 23 ஆவது மாவட்ட மாநாட்டில் சபதம் ஏற்போம்.

;