ஓசூர்,நவ.27- ஓசூர் மாநகராட்சி மற்றும் கர்நாடகா எல்லைகளுக்கு இடையில் அமைந்துள்ளது பேகேப்பள்ளி ஊராட்சி மன்றம். வளர்ச்சியடைந்துள்ள இந்த ஊராட்சி மன்றத்தில் 8 கிராமங்களில் மிகப்பெரிய அளவில் 6 தனியார் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. 20,000 வீடுகள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.ஓசூர்-பேகே ப்பள்ளி செல்லும்சாலை ஒட்டி உள்ள தொழிற்பேட்டையில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட சிறு தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. பேகேப்பள்ளி, ஜூஜூவாடி, கோவிந்தா அக்ரஹாரம், ராஜேஸ்வரி லே அவுட் ஆகிய 4 சாலை சந்திப்பி லிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் கோவிந்தா அக்ரஹாரம் சாலை பேகேப்பள்ளி ஊராட்சி கட்டுப் பாட்டில் உள்ளது. இச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆம் முறை யாக தார் போடப்பட்டது. 24 மணி நேரமும் 2 சக்கரம், 4 சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள், தனியார் பேருந்து கள் என 24 மணி நேரமும் இந்த சாலை யில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்நிலையில், இந்த சாலை 1.5 கிலோ மீட்டர் குண்டும் குழியும், சேரும் சகதியும் நடப்பதற்கே தகுதி யற்ற நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை ஊராட்சி மன்றத் தலைவர், சாராட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என மாறி மாறி கோரிக்கை மனு கொடுத் தும் பயனில்லை. காரணம், கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சியில் நிதி இல்லை. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சாராட்சியர், வட்டாட்சியருக்கு மனு கொடுங்கள் என்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் தனது பொறுப்பை தட்டிக் கழித்து கொள்கின்றனர். இந்த சாலையை சீரமைத்து இரு புறமும் கழிவுநீர் கால்வாய் கட்டிக் கொடுக்க வேண்டும் வார்டு கவுன்சி லர் முரளி, கிராம மக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், கோபத்தில் உள்ள மக்கள் மறியல் போராட்டம் நடத்தும் திட்டமிட்டுள்ளனர்.