தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயங்குவதுபோல் காட்டுவதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கப்பட்டது. இதை அடுத்து, மதுரையிலிருந்து வழக்கமாக காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நாளை முதல் காலை 6.40 மணிக்குப் புறப்பட உள்ளது. இதனால் பயணிகள் கூடுதல் நேரம் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயங்குவதுபோல் காட்டுவதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. பாண்டியன், பொதிகை, பல்லவன் உள்ளிட்ட ரயில்களின் வேகமும் வந்தே பாரத் ரயிலுக்காக குறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் வந்தே பாரத் ரயிலுக்காக, சாமானிய மக்கள் பயணிக்கும் ரயில்களில் வேகம் குறைக்கப்படுவதற்கு ரயில் பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.