tamilnadu

img

மோடி அரசிற்கு தேசபக்தி வாயளவு மட்டுமே உள்ளது

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் கோவை மாவட்டக்குழுவில் மெலினா என்கிற திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரோனா காலகட்டத்தில் மாதர் சங்கத்தினர் வழங்கிய உதவிகள் மற்றும் அனைவரையும் மாதர் சங்கம் சமமாக பாவிக்கிற நடவடிக்கைகள் ஆகியவைகள் தன்னை ஈர்த்தது என்றார். மெலினா கவுண்டம்பாளையத்தில் மாதர் சங்கத்தின் கிளை செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவை, ஜூன் 22- மண் விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும் போராடியவர்கள் நாங்கள். மோடி அரசிற்கு தேச பக்தி என்பது வாயளவு மட்டுமே உள்ளது என மாதர் சங்க கோவை  மாவட்ட மாநாட்டின் பொதுக்கூட் டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி பெரு மிதம் தெரிவித்தார். அவர் பேசுகையில், ஜனநாயக  மாதர் சங்கம் என்பது இந்தியா முழு வதும் இருக்கக்கூடிய ஒரு பிரம்  மாண்டமான அமைப்பில், ஒரு  கோடிக்கும் மேற்பட்ட உறுப்பி னர்களை கொண்டுள்ளது. இந்நாட்  டில் நடுநிலையான அமைப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்கிற அமைப்புகளுக்கு மத்தியில் அரசி யல் கண்ணோட்டம் கொண்ட ஒரு  அமைப்பு என்றால் அது அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மட்டுமே. மண் விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும் போராடிய வர்கள் நாங்கள். அரசியல் கண் ணோட்டத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போராடும் அமைப்பு மாதர் சங்கம். மோடி அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கை களே இன்றைய விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மோடி அர சின் வரி உயர்வும் முக்கிய காரணம். நாம் வடை சுட வேண்டுமென் றால் கறிவேப்பிலை, பருப்பு உள் ளிட்ட பொருட்கள் தேவைப்படும். ஆனால், மோடிக்கு அதெல்லாம் தேவையில்லை. வாயிலேயே வடை சுடுவார். உதாரணமாக ஆண்  டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றது. 500, 1000  ரூபாய் செல்லாது என அறிவித்து  கருப்பு பணத்தை ஒழிப்போம். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும்  கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு மக்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்ற  வாக்குறுதி பொய்த்து போனது. சிலிண்டருக்கு ரூ.200 வரை மானி யம் வழங்கப்படும் என நிதி அமைச்  சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன் றத்தில் கூறினார். ஆனால், உண்  மையில் அந்த மானியம் உஜ்வாலா  திட்டத்தின் மூலம் இணைப்பு பெற்ற வர்களுக்கு மட்டுமே வழங்கப்படு கிறது. மானியத்தை வெட்டுவது தான் மோடி அரசின் முக்கிய நோக்  கம் ஆக உள்ளது. 

மேலும், அனைத்துத் துறைகளி லும் நிரந்தர வேலை என்பதை மோடி அரசு சிதைத்து, ஒப்பந்தக்  கூலி முறையை அமல்படுத்தி வரு கிறது. மேலும், சம்பளம், பென்சன்  குறைப்பு உள்ளிட்டவற்றால் பெண் கள், இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடும். உதாரணமாக, இந்திய ராணுவத்திற்கு 2,3 வருடம் ஆட்கள் சேர்க்கப்படவில்லை. தற்  போது ராணுவத்தில் அக்னி பாதை என்கிற ஒப்பந்த முறையை கொண்டு வர மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இத்திட்டத்தில்,  4 வருட காண்டிராக்ட் முறை அனு மதிக்க முடியாத ஒன்று. மேலும்,  இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தில்  சேரும் இளைஞர்கள் ஒப்பந்தம் முடிந்த பின்னர், பிற்காலத்தில் கூலிப்படைகள் அவர்களை ஈர்க்க  வாய்ப்பு உள்ளது, இது சமூக விரோத செயல் மட்டுமல்ல; இது ஒரு தேசத் துரோகச் செயல். இப்  போது நடைபெறும் ரயில் எரிப்பு உள்ளிட்டவற்றிற்கு மோடி அரசே முக்கியக் காரணம். மோடி அரசிற்கு தேசபக்தி என்பது வாயளவு மட்டுமே உள்  ளது. தேச நலனுக்கும், மோடி அர சிற்கும் துளியளவும் சம்பந்த மில்லை. முற்காலத்தில் வாட கைக்கு விடுவது என்பது வீடு மட்டு மாக இருந்தது. தற்போது வாட கைத் தாய் உள்ளிட்ட கர்ப்பப்பை விற்பனை, கருமுட்டை விற்பனை  போன்றவை நமது நாட்டில் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. ஈரோடு கருமுட்டை விற்பனையில் 16 வயது சிறுமியை ஈடுபடுத்தியுள் ளனர். ஆனால் கருமுட்டை விற் பனை செய்ய குறைந்தது 21  வயது நிறைவு பெற்றிருக்க வேண்  டும். ஆகவே, இதில் ஏற்படும் குளறு படிகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதர் சங்கம் பாதிக்கப்பட்ட பெண்களின் சாதி, மதம் பாராமல் யாராக இருந்தாலும் போராடும். ஆனால், பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை அவ்வாறு போராடியது உண்டா? மதரீதியாக மட்டுமே அவர்களின் செயல் இருக்  கும். ஆகவே, இதை அனைத்தை யும் எதிர்த்து போராட வேண்டிய கடமை நமக்கு உள்ளது.  இவ்வாறு உ.வாசுகி பேசி னார்.

;