வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு வின் பொதுச் செயலாளர் குயென் பு டிராங்கு க்கு லெனின் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு அளித்து கவுரப்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும், குறிப்பாக ரஷ்யாவில் பெரும் மதிப்பைப் பெற்றி ருக்கும் அற்புதமான அரசியல்வாதி என்று விருது வழங்கும் விழாவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மத்தி யக்குழுவின் துணைத்தலைவர் லியோனித் கலஷ்னி கோவ் புகழ்மாலை சூட்டி விருதை வழங்கினார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தில் பாலின சமத்து வம் நிலவ வேண்டும் என்று ஜப்பான் கம்யூனி ஸ்ட் கட்சியின் செயற்குழுத் தலைவர் கோய்கே அகிரா வலியுறுத்தியுள்ளார். அரசியல் அரங்கில் பாலின ரீதியான ஒதுக்கீட்டு முறை உருவாக்கப் பட வேண்டும். 2030 ஆம் ஆண்டிற்குள் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்வு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 விழுக்காட்டி னர் பெண்களாக இருப்பதைக் கட்சி உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கியூபாவுடனான கொள்கையில் மாற்றங்கள் தேவை என்று 114 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ஜோ பைடனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பொருளாதார நெருக் கடி மற்றும் இரு தரப்புக்கும் பலன் அளிக்கும் விஷ யங்களின் ஒத்துழைப்பு தேவை என்றும், டிரம்ப் கடைபிடித்த கொள்கைகள் மற்றும் தடைகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கடி தத்தில் வலியுறுத்தியுள்ளனர்.